குவிலென்ஸ் பொருத்தும் பணி தீவிரம்!!

 -MMH 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

அபாயகரமான மற்றும் செங்குத்தாக சாலையாக உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் இதனால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தற்போது கல்லட்டி மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் குவிலென்ஸ் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க உதவியாக இருக்கும்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments