விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து!!

   -MMH 

    சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீதும் சுவர் இடிந்து விழுந்து அப்பளம்போல் நொறுங்கி முழுவதுமாக சேதமடைந்தன.

மேலும் பொதுவாக நடைபாதை வியாபாரிகள் அங்கு கடைபோட்டு வியாபாரம் செய்வது வழக்கம். ஆனால் இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை..

Comments