தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்..!

    -MMH 

    அ.தி.மு.கவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்னும் கோஷத்தை அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திடீரென எழுப்பினர். இதனால், சென்னை வானகரத்தில் உள்ள் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில், ஜூன் 23ம் தேதி  அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த கூட்டத்துக்கு முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் குறித்து தீர்மானம் நிறைவேற்றக்கூடாது எனவும், 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற்றிருந்தார். ஆனால் அதையும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஒற்றை தலைமை குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என்றுதான் வலியுறுத்துகின்றனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

-ஆர்.கே.பூபதி.


Comments