முத்தமிழ் டாக்டர் கலைஞர் உடைய பிறந்தநாளை திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டது!!

   -MMH 
   திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் அவருடைய 99 வது பிறந்தநாளை முன்னிட்டு அணிக்கடவு ராமச்சந்திராபுரத்தில் திமுக கழகக் கொடியை ஏற்றி டாக்டர் கலைஞர் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி மதிய விருந்து சுமார் 500 பேருக்கு ஒன்றிய செயலாளர் ச.கிரி முன்னிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இரா.ஜெய ராமகிருஷ்ணன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டு அணிக்கடவு ராமச்சந்திராபுரம் பகுதிகளில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் உடைய பிறந்தநாளை இன்று ஊர் முழுவதும் திருவிழாவைப் போல  கொண்டாடப்பட்டது.
முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு  தாராபுரம் புதிய காவல் நிலைய விதி, சீதா நகர் ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் பின்
கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். நகர கழக செயலாளர் தாரை தளபதி கே. எஸ் தனசேகர் அவர்கள் மற்றும்
நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன் ME(Str).,LLB., அவர்கள், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ் அவர்கள்,  மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் கழக நகரக் கழக ஒன்றிய கழக கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments