அ.தி.மு.க வில் மேலும் பல சுவாரசியங்கள் மற்றும் பல திருப்புமுனைகள்!!
கடந்த 20 நாட்களாக அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை அரசு வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் செயலாளர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த குழப்பங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான் கட்சிப் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்ட செயலாளர்களை அழைத்து ஒற்றை தலைமை அரசு வேண்டாம் என்றும் இரட்டை தலைமை அரசு சரியானது என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
தற்போது ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வெறும் 7 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு கூறியிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு 62 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது அதிமுகவில்.
இந்த நிலையில் அதிமுக 60லிருந்து காவல் அதிகாரிகளுக்கு கூடுதல் பாதுகாப்பிற்கு வேண்டும் என்று அழைப்பு விடுத்ததால் காவல் அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு விரைந்தனர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இல்லாமல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அலுவலத்திற்கு வந்திருப்பது பரபரப்பான சூழ்நிலையில் ஏற்படுத்தியுள்ளது.
நடக்கப்போவது என்ன காத்திருந்து பார்ப்போம்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.
Comments