மாஸ்க் அணிய எச்சரிக்கை!!

   -MMH 

    கோவை: கொரோனா தொற்று கடந்த மூன்று மாதங்களாக கொரோனா தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகர போலீசார், பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து வாகனம் மூலம் முக கவசம் அணிய  வலியுறுத்தியும் தனிமனித சமூக இடைவெளியை பின்பற்றவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

முக கவசம் அணிய மறுத்தாலோ, சமூக இடைவெளி பின்பற்ற தவறினாலோ, அரசு உத்தரவுபடி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்று என்று போலீசார், ரோந்து வாகனம் மூலம் மைக்கில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அருண்குமார், கிணத்துக்கடவு.
   

Comments