தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து..!!!

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அடுத்த  கோடங்கிபட்டியில் திருமலைசாமிக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையில் ஜூன் 4ஆம் தேதி சனிக்கிழமை இன்று மதியம்  கண் வயரில்  உள்ள போல்ட்டை சரி செய்வதற்காக  வெல்டிங் அடிக்கும் பணி நடைபெற்றுள்ளது அப்பொழுது  அதிலிருந்து வந்த தீப்பொறி அருகிலிருந்த தென்னை நாரில் பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அங்கு வேலை செய்த நபர்கள் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் தென்னைநார் என்பதால் தீ மளமளவென பரவியதால் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலறிந்த பொள்ளாச்சி தீயணைப்புத்துறை  நிலைய அலுவலர் புருஷோத்தமன் அவர்கள்  தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-அலாவுதீன், ஆனைமலை.

Comments