கோவை-திருச்சி சாலை மேம்பால திறப்பு விழாவில் மூன்று கட்சியினரும் உரிமை கொண்டாடி கூடியதால் பரபரப்பு..!
கோவை-திருச்சி சாலை மேம்பால திறப்பு விழாவில் பா.ஜ.க.,வினர் கோஷமிட்டபடி வந்ததால் பரபரப்பு..! மூன்று கட்சியினரும் உரிமை கொண்டாடி கூடியதால் பரபரப்பு..!
கோவை: கோவை திருச்சி சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியிலிருந்து, அல்வேர்னியா பள்ளி வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலத்தின் பணிகள் நிறைவடைந்தும் திறப்பு விழா காணாமல் இருந்த நிலையில், பொதுமக்கள் இந்த பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து திருச்சி சலை மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் இன்று காணொளி காட்சி வாயிலாக இந்த மேம்பாலங்களில் போக்குவரத்தை துவக்கி வைத்தார். முன்னதாக மேம்பாலம் திறப்பு விழாவிற்கு கட்சி கொடியுடன் பாரத் மாதா கி ஜெ என முழக்கம் எழுப்பியபடி பாஜகவினர் வந்தனர்.
பதிலடியாக சாலை ஓரங்களில் நடப்பட்டு இருந்த திமுக கொடி கம்பங்களை எடுத்து, கையில் ஏந்தியபடி திமுக.,வினரும் முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே அதிமுக.,வினரும் தங்களது கட்சி கொடியை பிடித்தவறு எஸ்.பி.வேலுமணி வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், பாஜக சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 3 கட்சியினரும் பங்கேற்ற நிலையில் கடும் பரபரப்புக்கு இடையே மேம்பாலம் திறக்கப்பட்டது.3 கட்சி தொண்டர்களும் ஒரே இடத்தில் திரண்டதால் போலீசார் செய்வதறியாது திணறினர். ஒருவழியாக மேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments