மாணவியர் மன்ற பிரிவு உபசார விழா மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலிங் மைய திறப்பு விழா நடைபெற்றது!!
கோவை பீளமேடு பகுதியில் உள்ள GRG கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்,மாணவியர் மன்ற பிரிவு உபசார விழா மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலிங் மைய ( BIRAC EYUWA CENTER ) திறப்பு விழா நடைபெற்றது.
கோவை பீளமேடு G R G கிருஷ்ணம்மாள் கல்லூரி வளாகத்தில் உயிர்தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலிங் திறப்பு விழா மற்றும் மாணவியர் மன்றத்தின் பிரிவு உபசார விழா நடைபெற்றது. ஜி ஆர் ஜி கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் டாக்டர் ஆர் நந்தினி தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பி காளிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து கல்லூரியின் ஆண்டு மலர் மற்றும் செய்தி மடல்களை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் காளிராஜ் வெளியிட்டார். பின்னர் பல்வேறு நிகழ்வுகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கும் சிறப்பாக பணியாற்றிய கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் யசோதா தேவி, முதல்வர் நிர்மலா,துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments