பராமரிப்பின்றி கிடக்கும் கொடுவாய் அங்கன்வாடி சமுதாயக்கூடம்..!!

   -MMH 

    தாராபுரம் ரோடு கொடுவாய் சார்ந்த லட்சுமி நகர் இந்திரா காலனியில்  குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி சமுதாயக்கூடம் பராமரிக்கின்றி இருக்கிறது.

கழிப்பறைகளும் மிகவும் மோசமான நிலையில் சுத்தமின்றி இருக்கும் அவலம். கட்டிடம் சரியான பராமரிப்பு இல்லாததால் சமுதாயக் கூடத்தில் மாற்றப்பட்டு அங்கன்வடி நடந்துகொண்டு வருகிறது.

ஊராட்சி தலைவர் நாச்சிமுத்து அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல்  தெரிவித்திருந்தும் இந்த சூழ்நிலை மாறவில்லை.

ஆகையால் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாட்ஷா, பிரதீப் கொடுவாய்.

Comments