திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் திறப்பு: முதல்வர் பங்கேற்பு!!

   -MMH 

    தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையை ஏற்று ஓய்வு எடுத்தார். ஆனாலும் உடல்நலக்குறைவில் இருந்து குணம் அடைந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், டாக்டர்கள் ஓய்வெடுக்குமாறு கூறினர் ஆனால், உற்சாகம் பெறவே உங்களை சந்திக்க வந்துள்ளேன் என குறிப்பிட்டார். 

மேலும் மருத்துவர்கள் தரும் மருந்து, மாத்திரைகளை விட மக்களை சந்திக்கும் போது உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படுகிறது. மக்களை சந்திக்கும் போது, ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை. சில தாய்மார்கள் என் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். இதனை நான் உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன். மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கம்பீரமாக உள்ளது. குறித்த காலத்திற்கு முன்பே பணிகள் முடிந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆர்.கே.பூபதி.


Comments