இருவருக்கு கொண்டாட்டம்! மற்றவர்களுக்கோ திண்டாட்டம்!! சாலையில் சென்ற சாக்கடைகள்!!!

 

-MMH

 கோவை நகருக்குள் பீர் குடித்துக் கொண்டே, டூ வீலரில் தாறுமாறான வேகத்தில் சென்று, எல்லோரையும் மிரட்டிய இளம் ஜோடியால், வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சிக்கு உள்ளாயினர்.கோவை, லாலி ரோட்டில் நேற்று முன் தினம் (திங்கள்கிழமை) இரவு 8:30 மணியளவில், எல்லா வாகன ஓட்டிகளையும் மிரட்டும் வகையில், குறுக்கும் நெடுக்குமாக ஒரு ஸ்கூட்டரில் படம் போட்டுக் கொண்டு பறந்தது ஒரு இளம் ஜோடி. 25 வயதுக்குட்பட்ட அந்த இளைஞனும், இளம்பெண்ணும் ஹெல்மெட் அணியாமல், கையில் பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு, வண்டியை ஓட்டியபடி குடித்துக் கொண்டே, படுவேகமாகச் சென்றனர்.

வண்டியை ஓட்டிக்கொண்டே, ஒரு வாய் பீர் குடித்து விட்டு, அந்தப் பெண்ணிடம் கொடுத்த இளைஞன், மறுபடியும் வண்டியை வேகமாக முறுக்கி, மற்ற வண்டிகளைப் பயமுறுத்தும் வகையில், கார்களுக்கும், டூ வீலர்களுக்கும் இடையில் புகுந்து புகுந்து சென்றார். அந்தப் பெண்ணும், பீர் பாட்டிலை வாங்கி, ஒரு வாய் குடித்து விட்டு, மறுபடியும் அந்த இளைஞனிடம் கொடுத்தார். இதைப் பார்த்து, மற்ற வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டனர்.யாராலும் வீடியோ கூட எடுக்க முடியாத அளவில், படுவேகமாக அந்த வண்டி பறந்தது. வண்டி எண்ணைப் பார்த்து, போலீசுக்குப் புகார் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், வண்டியில் போர்டு இருந்தது;எண்கள் இல்லை. மற்ற வாகன ஓட்டிகள் சிலர் கத்தியபோதும், அதைக் கண்டு கொள்ளாமல் படுவேகமாக வண்டி பறந்தது. மருதமலை ரோட்டில் சென்ற அந்த வண்டியை, முல்லை நகர் செக்போஸ்ட்டில் போலீசை மடக்கச் சொல்லலாம் என்று சிலர் அங்கு சென்றனர்.அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் காபிரியேல் என்பவரிடம், இதுபற்றி புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர், ''அவ்வளவு வேகமாப் போறவனை நாங்க எப்படி பிடிக்கிறது. இந்நேரம் அவன் எங்கே போயிருப்பானோ'' என்று 'பொறுப்பாக' பதிலளித்துவிட்டு, மொபைல் போனில் யாருடனோ பேசிக் கொண்டேயிருந்தார். இதனால் புகார் தெரிவிக்கச் சென்றவர்கள், நொந்து போய் திரும்ப வேண்டியதாயிற்று. அந்த இளம்ஜோடி, பி.என்.புதுாரிலிருந்து சீராபாளையம் செல்லும் நேதாஜி ரோட்டிற்குள் சென்று மறைந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments