தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசை முறைத்துப் பார்த்த இளைஞருக்கு தாறுமாறான அடி - உதவி ஆய்வாளரின் வெறிச்செயல்..!

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் கடந்த 27 ஆம் தேதி திங்கட்கிழமை இரவில் வேம்பார் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சூரங்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரம் வந்துள்ளார். அவர் இரவில் தாமஸ் அல்வா எடிசன் தனியாக இருப்பதை கண்டு அந்த இளைஞரிடம், எதற்காக இங்கு நிற்கிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் காவல் சார்பு ஆய்வாளர் சுந்தரத்தை முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த காவல் சார்பு ஆய்வாளர் சுந்தரம் அந்த இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சூரங்குடி சார்பு ஆய்வாளர் சுந்தரத்திடம், ஏன் அந்த தம்பியை அடிச்சீங்க?, பஸ் ஏற நிற்கக்கூடாதா?, நின்னா அடிப்பீங்களா? என கேட்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் சார்பு ஆய்வாளர் சுந்தரம், பஸ் ஸ்டாண்ட்ல ஏன் இருக்கேன்னு கேட்டா என்ன பார்த்து ஏன் முறைக்கிறான்? என்று கேட்டு பொதுமக்களுடன் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது. தற்போது சார்பு ஆய்வாளர் சுந்தரம் அடித்ததாக கூறப்படும் இளைஞர் தாமஸ் ஆல்வா எடிசன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

- வேல்முருகன் தூத்துக்குடி.

Comments