மீனாட்சிபுரம் பகுதியில் புதிதாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா!!

   -MMH 

    பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெருமாட்டி பஞ்சாயத்து மீனாட்சிபுரம் வில்லேஜ் ஆபீஸ் எதிரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் இன்று 12.30 மணி அளவில் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பெருமாட்டி பஞ்சாயத்து தலைவர் கைலாஷ் மற்றும் பெருமாட்டி பஞ்சாயத்து பொதுச்செயலாளர் அசோக் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக

பாலக்காடு மாவட்ட துணைத்தலைவர் A.K ஓமணகுட்டன், கொழிஞ்சாம்பாறை மண்டல பிரசிடெண்ட் K.ஸ்ரீகுமார்,சித்தூர் மண்டல செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட விவசாய அணி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தனர்.  


இந்நிகழ்ச்சியில் யுவ மோர்ச்சா சித்தூர்  மண்டல பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், பொருளாளர் லோகநாதன், யுவ மோர்ச்சா செயலாளர் சூரிய பிரகாஷ், துணைத் தலைவர் சிவானந்தம், பெருமாட்டி பஞ்சாயத்து செயலாளர்கள் ஷாஜகான், சுரேஷ்குமார், மணிகண்டன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் இறுதியாக பேசிய பெருமாட்டி பஞ்சாயத்து பொதுச்செயலாளர் அசோக் கட்சியில் இணைந்த புதிய தொண்டர்களுக்கு நல்லொழுக்கத்தை எப்படி பேணி காப்பது என்று எடுத்துரைத்தார்.

-M.சுரேஷ்குமார்.

Comments