தஞ்சை புத்தக கண்காட்சியில் இன்றைய நிகழ்ச்சி நிரல்!!

   -MMH 

    தஞ்சையில் நடைபெறும் மாபெரும் புத்தக கண்காட்சியில் இன்று காலை 10.30 மணி அளவில் தொல்காப்பியத்தில் தமிழரின் பண்பாடு  என்ற தலைப்பில் முனைவர் தமிழ்க்கடல் திரு இரா கலியபெருமாள் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். அந்த நிகழ்விற்கு தமிழக கலை பண்பாட்டுத்துறையைச்  சேர்ந்த முனைவர் திரு குணசேகரன் அவர்கள் முன்னிலை வகிக்க உள்ளார்.

காலை 10 மணி முதல் தொடங்கும் புத்தகக்கண்காட்சி ஆனதே 9:30 வரை நடைபெறுகிறது. இந்த அறிய வாய்ப்பினை  வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பப்பாசி அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இன்று மாலை சுமார் 6 மணியளவில் புத்தகம் என்னும் போதி மரம் என்ற தலைப்பில் முனைவர் திரு மணிகண்டன் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார். அதனைத் தொடர்ந்து திரு செந்தூரன் அவர்கள்  சிந்தனை செய் மனமே என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்த்தவுள்ளார் .

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இனிதே தங்களது  தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தவேண்டும்  விழாக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்


நாளைய வரலாறு செய்திக்காக 

-ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments