இந்திய மீனவர்களை தொடர்ந்து கைது செய்யும் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும் - லோக் ஜன சக்தி கட்சி பொதுசெயலாளர் தெரிவித்தார்!

-MMH

 இந்திய மீனவர்களை தொடர்ந்து கைது செய்யும் இலங்கை அரசுக்கு மத்திய மாநில அரசுகள் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட கோரிக்கை வைக்க வேண்டும் என ராஷ்ட்ரீய லோக் ஜன சக்தி கட்சியின் தேசிய பொதுசெயலாளர் மணிமாறன் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியின்   தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன் மாநில  மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார்..இதில்   நிர்வாகிகள் சி.பழனிசாமி,சிவா,பாலாஜி,கார்த்தி மற்றும் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய,அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் மணிமாறன்,தமிழகத்தை பொறுத்த வரையில் ஒவ்வொர் மாவட்டமாக கட்சியை வலுப்படுத்த கட்சி கொடியேற்றுவது மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும்,தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் பலரை கைது செய்தது தொடர்பாக பல கட்ட போராட்டம் நடைபெற்றதன் காரணமாக பலர் விடுதலை செய்யபட்டனர் அரசுக்கு கோரிக்கை இனி யாரையும் கைது செய்யக்கூடாது என்பதை மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி உறுதி படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,ஆன்லைன் ரம்மியை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் விளம்பரங்களில் பல பிரபல  நடிகர்கள் நடிப்பது வேதனை அளிப்பதாகவும், உள்ளதாகவும், இதுபோன்ற விளம்பரங்களில் எந்த நடிகர்களும் நடிக்க கூடாது அதனை தமிழக அரசு  ஒளிபரப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்… மின்கட்டணம் உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கபடுகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,தமிழகத்தில் இனி வரும் வரும் நாடாளுமன்ற ,சட்டமன்ற  தேர்தல்களில்  ராஷ்ட்ரீய ஜனதா கட்சி  போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments