நீண்ட நாளுக்கு பிறகு ரயில் சேவை! பொதுமக்கள் மகிழ்ச்சி!!

தினந்தோறும் ஆயிர கணக்கானோர் பயனடையும் ஈரோடு-பாலக்காடு இடையே ஓடும் ரயில். காலை மாலை இருவேளையும் ஆயிரக்கணக்கானோர் பயனடையும் வகையில் இந்த ரயிலானது மக்களுக்கு மிகவும் உதவி புரியும் வகையில் இருந்தது. கடந்த 2 வருடங்களுக்கு மேல் இந்த ரயில் சேவை கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பயணி சீட்டு ரூபாய் 35 லிருந்து 70 ரூபாயாக கட்டணத்தை உயர்த்தி உள்ள நிலையில் தற்போது மக்களின் நலன் கருதி டிக்கெட்டின் விலை குறைக்க வாய்ப்பு உள்ளதா என்று ரயில்வே துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாஷா.

Comments