உணவு பொருட்கள் மீதான வரி உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு வர்த்தகத்தை மிகவும் பாதிக்கிறது!!
கோவை கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தகர் அணி மண்டல கூட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் அப்துல் கலிம் தலைமையில் நடைபெற்ற இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பாபு, மாவட்ட செயலாளர் நிசார், தெற்கு மாவட்ட தலைவர் அபு ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோவை மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில தலைவர் கிண்டி அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதில் வர்த்தகத்தை பாதிக்க கூடிய பிரச்சனைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது எனவும் குறிப்பாக தற்போது மத்திய அரசு உணவு பொருட்கள் மீதான வரி உயர்வு, அதே போல சொத்து வரி உயர்வு செய்யப்பட்டது மிகவும் பாதிப்புக்கு ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் பணியை வேகமாக முடிக்க வேண்டும் எனவும் இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளவதாகவும் தெரிவித்தார். மேலும் மாநகரத்தில் அதிகரிக்கும் நாய்களால் மக்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் ரியல் எஸ்டேட் துறையில் சாமானிய மக்களுக்கு அரசின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது எனவும் சாமானியர்களுக்கு ஒரு நிலைபாடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நிலைபாடு இருப்பதாக தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஸ்டார் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர் ஹாலிவுட் அபு,மாவட்டத் துணைத் தலைவர் அன்சர் செரிப்,மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ்,செய்தி தொடர்பாளர் மன்சூர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments