ஓட்டப்பிடாரம் கோவில்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!! உதவி கலெக்டர் தகவல்!!

    -MMH 

தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: -

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகா விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந்தேதி காலை 10. 30 மணிக்கு நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 5 தாலுகா விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாய சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி.

Comments