துணை முதலமைச்சர் மீது பணமோசடி வழக்கு!!! அமலாக்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

  -MMH 

மதுக்கடை தனியார் உரிமம் மற்றும் விற்பனை உரிமம் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் பணமோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரத்தில் அவர்கள் அளித்த நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து டெல்லியின் துணை முதலமைச்சராக மணிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மேலும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கலால் துறையை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் மணிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது, தனியார் மதுபான கடையில் அனுமதி வழங்கப்பட்டதிலும் மற்றும் விற்பனை உரிமம் வழங்கப்பட்டதிலும் தில்லு முல்லு இருப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தற்போது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சிவகுமார், சிந்தாரிப்பேட்டை.

Comments