திருச்செங்கோடு பகுதியில் இல்லம் தேடி கல்வித் திட்டம்! தன்னார்வலர்களின் பங்களிப்போடு செயலாக்கம்!!

       -MMH 

நமது 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முகஸ்டாலின் ஆணையில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா அவர்கள் நேரடி பார்வையில் நடக்கும் இல்லம்தேடிய கல்வி தன்னார்வலர்கள் மூலம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் நமது திருச்செங்கோடில் 27 வது வார்டில் தன்னார்வலர் பிரேமா அவர்கள் தொடர்ந்து தன்னால் முடிந்தளவிற்கு மேல் இல்லம் தேடிய கல்வியில் படித்துவரும் மாணவர்களை ஊக்கப்படித்தி வருகிறார்.

ஆகவே கிரின்ஸ் போர்ட்ஸ் நிறுவனம் மூலம் சகோதரி தன்னார்வலர் ITK பிரேமா அவரை ஊக்குவிக்கும் வகையிலும் மாணாக்கர்களின்  தனித்திறமையை வெளிகொண்டுவரும் வகையிலும் மாணாக்கர்கள் பயில எழுதுபலகை, வெள்ளை போர்டு, கேரம் போர்டு‌ 1 செட், ஜெஸ் போர்டு 2 செட் பகுதி நண்பர்கள் மூலம் வழங்கப்பட்டது.

இது குறித்து ITK பிரேமா கூறுகையில்: "இது போல் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் அனைத்து இல்லம் தேடிய கல்வி நிலையத்திற்கு அந்தந்த பகுதி இளைஞர்கள் நாங்கள் செய்ததை போல் அவர்களும் முன் வந்து இதுபோல் அந்த குழந்தைகள் விளையாட்டு தனித்திறமையை வெளிகொண்டு அதற்கு தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.

நாங்கள் செய்ததை போல் மற்றவர்களும் செய்ய வேண்டும். அதற்கான முதல் முயற்சியே இந்த கல்விக்கு உதவும் நிகழ்வு நிகழ்ச்சி இனி வரும் காலங்களில் திருச்செங்கோடில் இயங்கிவரும் ITK நிலையத்திற்கு உதவி கேட்டு வரும் அனைவரின் கல்விக்கும் முடிந்த உதவி செய்யப்படும். எனது தொடர்பு எண் 9952692525" என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ரஞ்சித் குமார், திருச்செங்கோடு.

Comments