உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்ற வேண்டுமா? ஈசியான வழி வந்தாச்சு..!

 

-MMH

ஆதார் அட்டையில் இருக்கும் உங்களின் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். ஏனெனில் அப்போது தான் அரசின் நலத்திட்டங்களை சிக்கலின்றி பெற முடியும். இப்போது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை (Aadhar update) ஈசியான முறையில் மாற்றுவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

இந்திய மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளில் ஒன்றாக ஆதார் கார்டு விளங்குகிறது. மேலும் தற்போது அனைத்து சேவைகளை பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அத்துடன் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு வாயிலாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் உங்களின் விவரங்கள் அனைத்தும் மற்ற ஆவணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஒத்து இருக்க வேண்டும். இதில் ஏதேனும் சிறு மாறுபாடு ஏற்பட்டாலும் நீங்கள் அதனை கட்டாயமான முறையில் மாற்ற வேண்டும். Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 இல்லையெனில் அரசின் சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படக்கூடும். ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியானதாக கொடுக்கப்படவில்லையெனில் இதனை மாற்ற UIDAI அனுமதிக்கிறது. இதே போன்று கண் கருவிழி, கைரேகை பதிவு உள்ளிட்டவைகளையும் மாற்ற அனுமதிக்கிறது. முன்பெல்லாம் தலைமை தபால் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அலைந்து திரிந்து ஆதார் அட்டையில் இருக்கும் விவரங்களை மாற்ற வேண்டியிருக்கும்.

ஆனால் தற்போது உங்களின் பகுதிக்குட்பட்ட தபால் அலுவலகங்களில் மாற்றுவதற்கான வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் அலுவலகங்களில் பெயர், இமெயில் ஐடி, மொபைல் நம்பர், பிறந்த தேதி, கைரேகை, கருவிழி உள்ளிட்ட ஆதாரின் விவரங்கள் அனைத்துமே திருத்தி கொள்ளாலாம் என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. இதன் மூலமாக முதியவர்கள் ஆதாரின் விவரங்களை திருத்தி கொள்ள அலைய வேண்டிய தேவை ஏற்படாது.

தபால் அலுவலகங்களில் ஆதாரின் விவரங்கள் திருத்துவதற்கான (Aadhar update) சேவைக் கட்டணம்:

புதிய ஆதார் கார்டு : கட்டணம் இல்லை

பயோமெட்ரிக் தகவல்களை மாற்ற : ரூ. 100 மட்டுமே

பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் மாற்ற : ரூ. 50 மட்டுமே

-நாளைய வரலாறு செய்திகளுக்காக, தூத்துக்குடியில் இருந்து, 

-வேல்முருகன்.

Comments