துபாயில் நடைபெறும் சர்வதேச ஜூனியர் மாடல் ஃபேஷன் ஷோ!! கோவையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பங்கேற்பு!!

  -MMH 

துபாயில் நடைபெறும் சர்வதேச ஜூனியர் மாடல் ஃபேஷன் ஷோ கோவையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பங்கேற்பு.

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராணா சிவக்குமார் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 

இதையடுத்து, இந்த ஆண்டிற்கான சர்வதேச அளவிலான பேஷன் ஷோ நிகழ்ச்சி விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. இந்த பேஷன் ஷோவில் சிறுவன் ராணா பயிற்சி அளித்த 2 சிறுவர்கள் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர். 

இது குறித்து ரானாவின் தந்தை சிவக்குமார் கூறுகையில், துபாயில் வரும் அக்.18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள  சர்வதேச அளவிலான பேஷன் ஷோவில் இந்தியா சார்பில் 7 சிறுவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 2 பேர் கோவையில் நானும்  ராணாவும் பயிற்சி அளித்த மோஹித் இஷான்(4), திஷான் (6) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

 அங்கு 4 சுற்றுகள் நடைபெற உள்ளது. 4 முதல் 6 வயது பிரிவில் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறுபவர் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஜூனியர் மாடலாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments