பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை!!!

 

      -MMH 

    வேலூர் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே உள்ள துத்திப்பாட்டு பகுதியை சேர்ந்த சாயூப் பானு இவர் வேலூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாயூப் பானு வீட்டை பூட்டிவிட்டு விரிஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாயூப் பானுவின் வீட்டிற்கு வேலைக்கார பெண் சென்றபோது பூட்டை உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்ததைக்  கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக சாயூப் பானுவிற்கு தகவல் அளித்தனர், அதன் பின்பு அவர் விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து உள்ளே வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது  இது குறித்து சாயூப் பானு அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் போலீசார் கொள்ளை நடைபெற்ற வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர் மேலும் தடைவிழிகள் நிபுணர் மூலம்  கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் துத்திப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்தி களுக்காக

 -P. இரமேஷ் வேலூர்.

Comments