இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
காகித வடிவிலான பணத்துக்கு சரியான பாதுகாப்பு இல்லாததால் பணத்துக்கு நிகரான மெய் நிகர் நாணயம் என்று சொல்லும் கிரிப்டோ கரன்சிகள் அதாவது பிட்காயின்,பில்டெக்ஸ் காயின் உள்ளிட்ட காயின்கள் பாதுகாப்பு தன்மையுடன் வெளியிடப்பட்டது.
இந்த காயின்கள் உலக மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் கிரிப்டோ கரன்சிகளின் பின்னணியில் நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி ( ரூபாய் ) அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில் டிஜிட்டல் கரன்சி ( ரூபாய் ) சோதனை அடிப்படையில் கடந்த 1ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சில்லறை பண பரிமாற்றத்திற்கான டிஜிட்டல் கரன்சி ( ரூபாய் ) நாளை டிசம்பர் 1, வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்படுகிறது இத்தகவலை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST Bank உள்ளிட்ட வங்கிகளில் செயல்பாட்டுக்கு வருகிறது இந்த டிஜிட்டல் கரன்சியானது மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் கரன்சியாக இருக்கும். அதேசமயம் இது காகித ரூபாய் மற்றும் உலோக நாணயங்களின் மதிப்பையே கொண்டிருக்கும், ஏற்ற இறக்கம் இருக்காது. வெளியில் புழங்கும் கரன்சியின் மின்னணு வடிவமே இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments