உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேரு விளையாட்டு மைதானம் அருகே துவங்கியது!!

  -MMH 

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் & மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான் நேரு விளையாட்டு அருகே துவங்கியது.

இந்த வாக்கத்தானை  கோயம்பத்தூர் மாநகர சுகாதாரத் சேவை துறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரா துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள், நீரிழிவு நோய் பாதித்தவர்கள், கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் அண்டு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் கோயம்பத்தூர் மருத்துவர்கள் சங்க கோவை கிளையின் மருத்துவர்கள் உட்பட *500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வாக்கத்தான் கோவை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கி பார்க் கேட் வழியாக ராம்நகர் விவேகானந்தா சாலை வழியாக கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தை வந்தடைந்தது.

- சீனி,போத்தனூர்.

Comments