திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் கல்விக்கடன் சிறப்பு முகாம்!!

 

   -MMH 

   திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் கல்விக்கடன் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 14, 15 ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அறை எண் 20ல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், www.vidyalakshmi.co.in என்கிற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, அவ்விவரங்களுடன் முகாமில் பங்கேற்க வேண்டும். 

கல்விக்கடன் விண்ணப்ப நகல், மாணவ மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய போட்டோ, பேங்க் பாஸ்புக் நகல், வருமானச்சான்று நகல், சாதி சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல், கல்விக்கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

கல்லுாரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மணவர்கள் முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழை முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும். விவரங்களுக்கு 0421 2971185 என்கிற எண்ணில் மாவட்ட முன்னோடி வங்கியை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-பாஷா.

Comments