ஹிஜாப் "ஓவர்".. அடுத்தது ஹலால் தடை! நெருங்கும் கர்நாடக தேர்தல் - புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக !!

 

       -MMH 

ஹிஜாப் "ஓவர்".. அடுத்தது ஹலால் தடை! நெருங்கும் கர்நாடக தேர்தல் - புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக !!

  பெங்களூரு: 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர கர்நாடக அரசு விதித்த தடையை தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில் தற்போது இஸ்லாமியர்களின் மற்றுமொரு கடமையான ஹலாலுக்கும் தடை விதிக்க கர்நாடக பாஜக அரசு புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்து உள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பலவிதமாக குறி வைத்து தாக்கும் அரசியல் வழிகள் எப்பொழுதும் மக்களை குழப்பத்திலேயே வாழ வைக்கும் அரசியல் கட்சிகளும் அதில் இருக்கும் திமிங்கலங்களும்.

ஒருபுறம் மத அரசியல் இன்னொரு புறம் மதமே இல்லை என்றால் அரசியல் ஆனால் இரண்டுமே மக்களை வாழவைப்பதற்கும் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்கும் தயாராக இல்லை என்று மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

மக்களுக்கான கட்சி மக்களுக்கு என்று நல்லது நடக்கிறது அன்றே அதுவே மக்களுக்கான ஆட்சியாக இருக்கும் மக்களை வைத்து பணம் சம்பாதிக்கவும் அரசியலில் தக்கவைக்கவும் நினைக்கும் எந்த ஒரு கட்சியும் மக்களுக்கு நல்லது செய்ய இயலாது என்பது உண்மை.

நாளைய வரலாறு செய்திக்காக 

-பாஷா.

Comments