பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது!!

பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக நடைபெற்ற  மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு  பரிசளிப்பு விழா பி்.பி.ஜி.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.,மருத்துவ பல்கலை, பிசியோதெரபி கல்லூரிகளுக்கான தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கோவை பி.பி.ஜி., பிசியோதெரபி கல்லூரி சார்பாக கடந்த மூன்று தினங்களாக நேரு ஸ்டேடிய அரங்கில் நடைபெற்றது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ 

இதில்,சென்னை,கோவை,மதுரை,திருச்சி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட பிசியோதெரபி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். ஆடுகளம் 2022 எனும் இப்போட்டிகளை ,கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதில் தடகளம், தொடர் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் என பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிசியோதெரிபி கல்லூரி மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இந்த போட்டிகளுக்கான நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா பி.பி.ஜி.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru 

பி.பி.ஜி., கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர்  தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதில் கோவை கே.ஜி.பிசியோதெரபி மற்றும் ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லூரிகளும் சம புள்ளிகள் பெற்று முதல் பரிசை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்,பி.பி.ஜி.கல்லூரியின் தாளாளர் சாந்தி தங்கவேலு, அறங்காவலர் அக்சய், கல்லூரி முதல்வர் சிவக்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி, போத்தனூர்.

Comments