உடல் உறுப்பு தானம் செய்ய முன் வரவேண்டும் ! - விழிப்புணர்வு ஏற்படுத்திய பிஎஸ்ஜி மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்!!

   -MMH 

உடல் உறுப்பு தானம் செய்ய முன் வரவேண்டும்!-விழிப்புணர்வு ஏற்படுத்திய பிஎஸ்ஜி மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்...

    கோவை : மூளை சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்பு தானம் மூலம் ஐந்து பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பிஎஸ்ஜி மருத்துவமனை. இயக்குனர் புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்,மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் தமிழகத்தில் விபத்துகள் தடுக்கப்பட வேண்டும்,விபத்தின் போது மூளை சாவு என்ற ஒரு கட்டம் வரும் பொழுது, அந்த குடும்பத்தார்கள் மூளை சாவு அடைந்த நபர்களின் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என கேட்டு கொண்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருவரின் உடல் உறுப்பு தானம் மூலம், இருதய நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள்,சிறுநீரக பழுதுபட்ட நோயாளிகளுக்கு என மொத்தம் ஐந்து நபர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யபட்டு தற்போது முழு குணமடைந்து வீட்டிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சையும், குறைந்த அளவிலான கட்டணங்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிவித்த அவர் உடல் உறுப்பு தானம் குறித்து மக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

இந்த சந்திப்பின் போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் வெங்கடகிருஷ்ணன்,இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரதீப்,இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தநாராயணன்,மயக்க மருந்து நிபுணர் சிவக்குமார்,  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் வேணு, மருத்துவர்கள் பிரசாந்த், கணேஷ்,  சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர்கள் வசந்த்,அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

- சீனி,போத்தனூர்.

Comments