ஆதரவு அற்ற அன்பு இல்ல மாணவ மாணவிகளுக்கு பொங்கல் விளையாட்டு போட்டிகள்!
ஆதரவு அற்ற அன்பு இல்ல மாணவ மாணவிகளுக்கு பொங்கல் விளையாட்டு போட்டிகள்!
கோவை மாவட்டம் கோவை புதூர் புகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல், நாலாம் அணி சார்பாக ஆதரவற்ற அன்பு இல்ல மாணவ மாணவிகளுக்கு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. இந்த பொங்கல் விளையாட்டுப் போட்டியினை நாலாவது பட்டாலியனின் கமாண்டன்ட் செந்தில்குமார் தொடக்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டி காலை தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டிகளில், கோவையில் உள்ள 13 ஆதரவற்ற மற்றும் அன்பு இல்ல குழந்தைகள் 368 பேர் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகள் லெமன் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், குண்டு எறிதல்| சாக்குப்போட்டி| நீளம் தாண்டுதல், லக்கி கார்னர், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன, இந்த பொங்கல் விளையாட்டு போட்டி 9-வது வருடமாக நடத்தப்படுகிறது. இந்த போட்டி நடத்துவதற்கான நோக்கம் ஆதரவற்ற அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும், உற்சாகமும், மகிழ்ச்சியையும் உருவாக்கும் வகையிலும் போட்டி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. ஆதலால் மாணவ மாணவிகள் இந்த போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார். இந்த விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை டி. எஸ். பி. க்கள் அய்யர்சாமி, ரவிச்சந்திரன், குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு சிறப்பு காவல் படை நாலாவது பட்டாலியன் உடன் இணைந்து ஏ. ஆர். சி நிறுவனமும் சேர்ந்து செய்து இருந்தனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாலை பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
zPlease Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments