இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பாக கோவையில் நடைபெற உள்ள கருத்தரங்கு...

 

-MMH

இந்திய  இரைப்பை  குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பாக கோவையில் நடைபெற உள்ள கருத்தரங்கில் இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ள உள்ளதாக சங்கத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு கோவையில் தெரிவித்துள்ளார்:-

இந்திய  இரைப்பை  குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (IAGES) கடந்த  1993 ஆம் துவங்கப்பட்டு,இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபால் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பத்தாயிரம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.இரைப்பை குடல் தொடர்பான சிகிச்சையில் நவீன மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு,மற்றும் ஆய்வு கட்டுரைகளை தொடர்ந்து நடத்தி வரும்,  இச்சங்கத்தின் இருபதாவது தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது.இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அஸ்வின் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.இதில் இந்திய  இரைப்பை  குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு, மற்றும் பொருளாளர் டாக்டர் மாதேஸ் ஆகியோர் பேசினர்.

வரும் 10 ந்தேதி துவங்கி 12 ந்தேதி வரை நடைபெற உள்ள இதில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ள உள்ளதாகவும் மேலும் இதில், அனுபவம் மற்றும் புகழ்மிக்க அறுவை சிகிச்சை பேராசிரியர்கள் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் அறுவை சிகிச்சைகள் குறித்து இளம் நிபுணர்களுக்கு நேரடி ஒளிபரப்பின் வாயிலாக காண்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் கங்காதர் கே எம் சி எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி ஈஷா அமைப்பின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

-சீனி போத்தனூர்.

Comments