உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகள போட்டியில் கோவைபுதூர் பள்ளி மாணவர் யோகேஸ்வர் வெள்ளி பதக்கம்!!

 -MMH

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன்  யோகேஸ்வர். கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில்  படித்து வரும் இவர்,அண்மையில்,உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற   5 வது இளையோர் ஆசிய   அளவிலான தடகள போட்டியில்  2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவிற்கு  பெருமை சேர்த்துள்ளார்.

சுமார் 40 நாடுகளை சேர்ந்த  வீர்ர்கள்  கலந்து கொண்ட போட்டியில்,3000 மீட்டர் தூரத்தை  8 நிமிடம் 39 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்த யோகேஸ்வர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்திய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை விமான நிலையம் திரும்பிய யோகேஸ்வருக்கு  ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகி கவுரி உதயேந்திரன் ,பள்ளி முதல்வர்  சரண்யா மற்றும்  ஆசிரிய,ஆசிரியைகள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், தடகள வீர்ர்கள், கோவை மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள்  என நூறுக்கும் மேற்பட்டோர் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றிகளை குவித்துள்ள  யோகேஸ்வர் தனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் பதக்கம் பெறுவதே என நம்பிக்கை என தெரிவித்துள்ளார்.

-சீனி, போத்தனூர்.

Comments