தூத்துக்குடி காமராஜர் கலை கல்லூரியில் மூன்று நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்!!

இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் தூத்துக்குடி காமராஜர் கலை கல்லூரியில் மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் இன்று அரசு தரப்பு பேச்சு வார்த்தையில் வெற்றி பெற்றது.

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளும் சுயநிதி பாடப்பிரிவுகளும் உள்ளடக்கிய கல்லூரி ஆக செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் 2000க்கு மேற்பட்ட மாணவர்களும் ஸ்ரீநிதி பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் மொத்தம் 5000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கும் அரசு நிர்ணயித்திருக்கின்ற கட்டணத்தை வசூலிக்காமல் பல மடங்கு அதிகமாக வசூலித்து வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் 26-06-2023 கல்லூரி மாணவர்களோடு இணைந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் முதல்கட்டமாக பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படும் என்றும் அதன் மூலம் சுமுகமான தீர்வு எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்ட அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது, ஆனால் பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலவரத்தை தூண்டுகின்றனர் என்று உண்மைக்கு புறம்பாக செய்திகளை கூறி கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்தது.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த துரோக செயலை கண்டித்து 27-6 2023 அன்று மீண்டும் கல்லூரியில் போராட்டம் துவங்கியது கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கான குழுவ அமைக்காமலும் எந்த ஒரு உடன்பாட்டிற்கும் வராமலும் ஏதேச்சதிகாரப் போக்குடன் கல்லூரிக்கு நான்கு நாள் விடுமுறையை அளித்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

https://youtube.com/shorts/nBUAE8BZzEU?feature=share

விடுமுறை முடிந்து இன்று 03-07-2023 திங்கட்கிழமை மீண்டும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர் போராட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் தொடர் போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அரசு தரப்பில் இருந்து தூத்துக்குடி தாலுக்கா வட்டாட்சியர் திரு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது, தூத்துக்குடி மாவட்டசெயலாளர் கார்த்திக், கிளை நிர்வாகி நேசமணி, கல்லூரி மற்ற மாணவர்கள் தரப்பிலிருந்து 6 மாணவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கல்லூரி நிர்வாகம் உயர்த்தப்பட்ட கட்டணம் பல மடங்காக உள்ளதை சுட்டிக்காட்டி அவற்றை திரும்ப பெற வேண்டும் என்று மாணவர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது இறுதியில் பல மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணம் செல்லுபடி ஆகாது என்றும் கீழ்கண்ட முடிவுகள் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

1.சுயநிதிபாடப்பிரிவுயில் கடந்தான்டு கட்டணத்தில் இருந்து 10% மட்டும்  உயரத்துவது.

2.வரும் கல்வியாண்டில் இருந்து முதலாம் ஆண்டு சேர்க்கையின் பொழுது என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ  அதையே மூன்றாண்டுகளும் தொடர்வது என்றும்.

3. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்ப பெறுவது.

4. அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்குவது என்றும் அந்த கட்டணம் அரசு நிர்ணயத்திற்கும் கட்டணத்தோடு உடன்பட்டதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 4. 15 நாட்களில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

5. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த ஒரு பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்த பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அளித்த காவல்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு சார்பாகவும், தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பாக  நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இப்போராட்டத்தில் தொடர்ச்சியாக இந்திய மாணவர் சங்கத்தோடு இணைந்து வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி காமராஜ் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் மாணவியர்கள் அனைவருக்கும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பாகவும், தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பாகவும் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.

Comments