வட்டிக்கு பணம் கொடுத்து ஏமார்ந்தால் முதல் வழக்கு பணம் கொடுத்தவர் மீதுதான்!! வேலூர் சரக டி.ஐ.ஜி அதிரடி!!
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களை பெற்ற வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அப்போது பேசிய அவர், வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு வட்டி வரவில்லை பணம் வரவில்லை என்று யாராவது புகார் அளிக்க வந்தால் புகார் அளிக்க வந்தவர் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வேடிக்கையாக கூறினார். இவ்வாறு அவர் கூறியதும் கூட்டத்தில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிரித்தாலும் அவர் கூறியதற்கான காரணம் சிந்திக்கும்படி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பவர்களுக்கு காவல்துறையினர் என்ன கலெக்சன் ஏஜெண்டா? என்றும் ஏற்கனவே கொலை, கொள்ளை, என பல முக்கிய வழக்குகளை விசாரிக்க வேண்டிய முக்கிய பொறுப்புகள் இருக்கும்போது இதுபோன்ற புகார்களை பெற்று பனிச்சுமையை அதிகரித்துக் கொள்ள வேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஐஜி முத்துசாமி அவர்கள் அறிவுரை வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பவர்களுக்கு காவல்துறையினர்தான் கிடைத்தோமா என ஆதங்கப்பட்டார். பொதுமக்களை பாதிக்கும் எந்த ஒரு விவகாரமானாலும், குற்ற செயலாக இருந்தாலும் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர் அறிவுறுத்தினார். வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
காவல் நிலையங்களுக்கு திடீர் திடீரென்று சென்று ஆய்வு நடத்தக்கூடியவர். ஆய்வின் போது காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பதியப்பட்ட வழக்குகள் பற்றி எல்லாம் கேள்வி கணைகளால் தொலைத்தெடுப்பார் நமது மக்களின் காவலர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments