தருவைகுளத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது...

-MMH

  தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்   முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  கருத்தரங்குகள்  நடைபெற்று. 
'சட்டமன்ற நாயகர் - கலைஞர்' என்ற தலைப்பிலான கருத்தரங்க நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர்  ஆர்.ஆவுடையப்பன் அவர்களும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, அவர்களும் முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் த
செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மற்றும் கலைஞரை பற்றி சிறந்த முறையில் பேசிய அனைத்து மாணவ செல்வங்களுக்கு சான்றிதழ்களும் சிறப்பு பரிசுகளையும் வழங்கினார்கள்.

ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன்  எல்.ரமேஷ் அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, வட்டாச்சியர் சுரேஷ் அவர்கள்  வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி  அவர்கள் ,  ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள்  பள்ளி தலைமை ஆசிரியர் அண்டோ ரூபன், தருவைகுளம் ஊராட்சி தலைவர் காடோடி  அவர்கள்  மற்றும் சட்டமன்ற குழு உறுப்பினர்கள்,  அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர், 
-முனியசாமி.

Comments