இந்திய அணி 4 வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில்  நடைபெற்றது.

முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. இதன்பின் 175 ரன்கள் என்ற  இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments