புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ புதிய முயற்சி!!


கோயம்புத்தூர்
ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம்  மற்றும் தனியார் அமைப்புடன் இணைந்து புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ புதிய முயற்சி!

வாலங்குளத்தில் கண்கவரும் எல்இடி லேசர் ஷோ, ட்ரோன் ஷோ, ஹீலியம் பலூன் போன்ற பிரமாண்ட  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் தொடங்கி வைக்கின்றனர்

பல தசாப்தங்களாக, புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் காதலர்கள் என இளம்,தலைமுறையினரிடம்  மதுபானம் மற்றும் நடனம் ஆகியவை கவனத்தை ஈர்க்கிறது. இந்தப் போக்கு முடிவில்லாததாகத் தோன்றுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோயம்புத்தூரைச் சேர்ந்த சுற்றுலா அமைப்பு இதை மாற்றி குடும்ப நட்பு நிகழ்வாக மாற்ற முயற்சி செய்கிறது. சுற்றுலாத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ட்ரையம்ப் எக்ஸ்பெடிஷன்ஸ், இந்த ஆண்டு வாலாங்குளம் ஏரி பகுதிகளை சுற்றி மது இல்லாத தனித்துவமான புத்தாண்டு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது, அங்கு பொதுமக்களுக்கு ஏராளமான இலவச பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொண்டுவர உள்ளது.

இது குறித்து ட்ரையம்ப் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, மதுவிலக்கு இல்லாத புத்தாண்டு கொண்டாட்டங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வாலாங்குளம் ஏரிக்கரையை சுற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு பொதுமக்கள் அனுமதிக்கபடுவார்கள்.  

இங்கு வரம்பற்ற வேடிக்கையான செயல்பாடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  பங்கேற்கலாம்.  ஏராளமான மேடை நிகழ்ச்சிகள் இருக்கும்; பின்னணி பாடகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். ஆதவன் (விஜய் டிவி), அமுதவாணன் மிமிக்ரி (விஜய் டிவி), டிஜே மியூசிக்,  போன்றவை இடம்பெறும். இந்த நிகழ்வின் சில சிறப்பம்சங்கள், கோவையில் 300 ட்ரோன்கள் உடன் கூடிய முதல் பொது ஆளில்லா விமான நிகழ்ச்சியாகும். இது 10-13 நிமிடங்கள் நீடிக்கும். அதைத் தொடர்ந்து, 15 நிமிடங்களுக்கு லேசராண்ட் எல்இடி விளக்கு காட்சி நடைபெறும். வாலாங்குளம் ஏரியில் மிதக்கும் தளத்தில் 20,000 LED பலூன்கள் மற்றும்  1000+ ஸ்கை லேட்டர்ன்கள் இந்த நிகழ்வில் வெளியிடப்படும், இரவு வானத்தை வண்ணங்களால் நிரப்பி, ஏரி முழுவதும் அழகான பிரகாசத்தைக் கொண்டு வரும்.

மேலும் 120 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் களத்தில் இருப்பார்கள். மைதானத்திற்குள் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க அனைத்து பைகளும் முழுமையாக சோதனை செய்யப்பட்டும். 

கோவை மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். 12:30 மணிக்கு முழு நிகழ்வும் முடிந்துவிடும். ட்ரையம்ப் எக்ஸ்பெடிஷன்ஸ் இந்த முழு நிகழ்விற்கும் கிட்டத்தட்ட ரூ.4 கோடி செலவழிக்கும் என்றும், உணவைத் தவிர இந்த நிகழ்ச்சிகளுக்கு நுழைவதற்கோ இந்த நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கோ கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த முன்முயற்சியின் பின்னணியில் புத்தாண்டைக் கொண்டாடுவதில் ஒரு புதிய போக்கை அமைப்பதாகும்.

-சீனி, போத்தனூர்.

Comments