ஓட்டப்பிடாரம் அருகே புளியமரத்து அரசடியில் தனியார் காற்றாலை டவரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - புதியம்புத்தூர் போலீசார் விசாரணை ...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புளியமரத்து அரசடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ஐயப்பசாமி என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் முத்துசெல்வம்(19) என்பவர் மாட்டு வண்டி போட்டிகளில் கலந்து கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. அதனை ஐயப்பசாமி தட்டி கேட்டதால் மன உளைச்சலில் முத்துசெல்வம் புளிய மரத்து அரசடி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் சுசிலான் தனியார் காற்றாலை டவரில் ஏறி நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முத்து செல்லும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.
Comments