இளம் தொழில் முனைவோர் இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் மாநாடு கொடிசியா வளாகத்தில் ஆரம்பம்!!
கோவையில் முதன் முறையாக 3000"க்கும் மேற்பட்டோர் பங்கு பெரும் இளம் தொழில் முனைவோருக்கான மாநாடு ஆரம்பம்!!
தொழில் முனைவோரின் உற்பத்திகள் கொடிசியா அரங்கில் காட்சிப்படுத்தினார்கள்.
இளம் தொழில் முனைவோர் மையம் - ("Young Entrepreneur School சார்பில் YESCON 2024 ")தலைப்பின் கீழ் இளம் தொழில் முனைவோர் இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் மாநாடு கொடிசியா வளாகத்தில் ஆரம்பமானது.
தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் சவால்கள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்ள மற்றும் தொழில் ரீதியான பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் முதன்முறையாக இந்த மாநாடு மட்டும் கருத்தரங்கம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. "மிகுதியை உணர்" என்ற தலைப்பின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று கொடிசியா அரங்கில் தொழில் முனைவோரின் பல்வேறு துறை சார்ந்த உற்பத்திகள், தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இளம் தொழில் முனைவோருக்கான உற்பத்தி மற்றும் தயாரிப்புகள் பார்வையாளர்களை ஈர்த்தன. 3000"க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றிருக்கும் இந்த மாநாட்டில், உறுப்பினர்களிடையே பிணைப்பை உருவாக்கவும், நேரில் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இந்த மாநாட்டின் வாயிலாக, இளம் தொழில் முனைவோருக்கான வளர்ச்சி, புதுமை, சிறந்த மேலாண்மை விடயங்களில் திறம்பட செயல்படுவது குறித்து கருத்துக்களை எடுத்துரைக்கினார்.
வெற்றிகரமான தொழில் வல்லுநர்கள் சிறப்புரைகளின் மூலமாக, வணிக யுத்திகள், தலைமைத்துவ திறன்கள் போன்ற பல தொழில் முன்னேற்றத்திற்கான விடயங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இளம் தொழில் முனைவோரை உலக அளவில் இட்டு செல்ல இந்த மாநாடு உதவும் என இளம் தொழில் முனைவோர் வழிகாட்டிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments