பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் மாரத்தான் போட்டி...

 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் மாரத்தான் போட்டி...தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை புதூர் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் மாராத்தான் போட்டி நடைபெற்றது. கோவை புதூர் பகுதியில் நடைபெற்ற இந்த மாறத்தான் போட்டியை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ் பி அன்பரசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகள் கேலக்ஸி தலைவர் செல்வராஜ் பாபு உடற்பயிற்சி ஆசிரியர் ஆனந்த் அரிமா ஜீவானந்தன் அரிமா இளங்குமரன் அரிமா லீலா கிருஷ்ணன் சிகி பாலு, தாமஸ் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி கோவைப்புதூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.Comments