வால்பாறை அருகே தொழிலாளர்கள் குடியிருப்பில் உள்ள வீடுகளை காட்டு யானைகள் இடித்து அட்டகாசம்!!!
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட. மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்டம் லாசன் கோட்டம் டி மாஸ்டர் பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகள் உள்ள பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மூன்று காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களின் குடியிருப்பில் இருந்த வீடுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.
தம்பி ராஜ் த/பெ. சின்னமுத்து என்பவரது வீட்டின் குடியிருப்பு மேற்கூரையின் ஒரு பகுதியை முற்றிலும் கீழே தள்ளப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் உடைந்து சேதம் அடைந்து உள்ளது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி வழங்கி உள்ளனர். காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments