கோவை மதுக்கரை தர்மலிங்கேஷ்வரர் கோவில் விவகாரத்தில் இந்தி அறநிலையத்துறை மற்றும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல் பரப்பி வருவதாக கோவில் அறங்காவலர் தெரிவிப்பு!!
கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் கிருஷ்ணசாமி பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக எழுந்த புகார் அடிப்படையில் அவரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு, விளக்கமளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆர். கிருஷ்ணசாமி கோயமுத்தூர் பிரஸ் கிளப் அரங்கில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் : கடந்த 1994 ல் இருந்து தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலராக உள்ளேன். அன்றைய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நான் உட்பட 5 பேரை அறங்காவலர்களாக நியமித்ததுடன், புதிய அறங்காவலரை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கினர். அதை தொடர்நது
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல்வேறு திருப்பணிகள் செய்து வருகின்றோம். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி வகுப்பை சேர்ந்தவன், ஒவ்வொரு அறங்காவலர் பதவி காலியாகும் போது புதிய அறங்காவலர்களை நியமனம் செய்து வந்தோம், அந்த அடிப்படையில் கடந்த 2021 ல் சி.கே.கண்ணன் மற்றும் சிவராஜ் ஆகிய இருவரை அறங்காவலராக நியமனம் செய்தேன், அவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து என் மீதும், கோவிலின் மீதும் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், மேலும் தொடர்ந்து இந்து அறநிலைய துறைக்கு தொடர்ந்து பல்வேறு நபர்களை வைத்து புகார் மனு அளித்து, தர்மலிங்கேஷ்வரர் கோவிலை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறினார்.
மேலும் கோவிலுக்கு சொந்தமான 125 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளதாக தவறான தகவலை கண்ணன் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், மதுக்கரை நெடுஞ்சாலை அருகே தர்மலிங்கேஷ்வரர் கோவில் மற்றும் மேலும் இரண்டு கோவிலுக்கு சொந்தமான 28 ஏக்கர் நிலம், கோவில் பெயரில் தான் உள்ளது. அந்த நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, வஞ்சியம்மன் கோவிலுக்கு வருவாய் சென்றது. இந்த விவகாரத்தில் நாங்கள் கேட்டுதான் செயல் அலுவலரை நியமிக்க கோரியதாக அவர், இந்நிலையில் நிலத்தை மீட்டதாக தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர் என கூறினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்து அறநிலைய துறை இணை ஆணையர் சரியாக விசாரனை செய்யாமல் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறிய அவர், இதனால் அரசுக்கும் இந்து அற நிலைய துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் நிலை இருப்பதாக வேதனை தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையினர் தன் மீது சுமர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் தவறான குற்றச்சாட்டுகள் என்றும், சி.கே.கண்ணன் தவறான தகவல்களை பரப்பி அரசுக்கு அவபெயரை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டிய அவர், இது குறித்து சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
பேட்டி - கிருஷ்ணசாமி - தர்மலிங்கேஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
-சீனி, போத்தனூர்.
Comments