கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி செவிலியர் கல்லூரியின் 26 வது விளக்கேற்றும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!


செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள் விளக்கோவை சரவணம்பட்டி  பி.பி.ஜி செவிலியர் கல்லூரியின் 26 வது விளக்கேற்றும் விழா  வெகு விமரிசையாக  நடைபெற்றது.

செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,விளக்குகளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள  பி.பி.ஜி.செவிலியர் கல்லூரியில் செவிலியர் மாணவ,மாணவிகள் 26 வது ஆண்டு விளக்கேற்றும் விழா கல்லூரி வளாக அரங்கில்  நடைபெற்றது. கல்லூரியின்  தாளாளர் சாந்தி தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி துணை தலைவர் அக்ஷய் தங்கவேலு,டாக்டர்.ஸ்வேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர்  சித்ரா  வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட சுகாதார சேவை இயக்குனர் டாக்டர் பி. அருணா,பி.பி.ஜி.செவிலியர் கல்லூரியின் முன்னாள்  மாணவரும்  ஸ்ட்ரோமா மற்றும் காயம் பராமரிப்பு ஆலோசகருமான  செவிலியர் சுரேந்திர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியல் 19 பட்டயப்படிப்பு 100 பட்டப்படிப்பு மாணவர்கள் விளக்கேற்றி உறுதி மொழி எடுத்தனர். விழா இறுதியில் முனைவர் ஜெயபாரதி நன்றியுரை வழங்கினார். 

-சீனி, போத்தனூர்.

Comments