மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா இரண்டு மாதம் அடைக்கப்படுகிறது!!!

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் மிக அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா இரண்டு மாத காலம் இன்று முதல் அடைக்கப்படுகிறது(01-02-2024). கேரள மாநிலத்தில் உள்ள ஆறு பூங்காக்களில் இரவிகுளம் தேசிய பூங்கா என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்து உள்ளது. 


இங்கு மிகவும் பிரபலமான ஒன்று இயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயூசிஎன்) சிகப்புப் பட்டியலில் உள்ள வரையாடு எனப்படும் மான் இனம் நிலைத்திருக்கத்தக்க வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படுகின்றது. எல்லா வருடமும் இரண்டு மாத காலம் அடைக்கப்படும் இந்த வருடம் இன்று முதல் அடைக்க வனத்துறையினர் தீர்மானித்துள்ளனர்.


வரையாடுகளின் பிரசவ காலம் என்பதால் இரண்டு மாத காலம் பார்க் அடைக்கப்படுகிறது. வரையாடுகளின் பிறப்பு காரணமாக சீப் வைல்டு லைஃப் வார்டன் உத்தரவு கொடுத்ததை தொடர்ந்து தான் குட்டிகளை பாதுகாக்கவும் வரையாடுகளின் பிரசவம் சுகமான முறையில் நடைபெறுவதற்காக தான் இரண்டு மாத காலம் பார்க் அடைக்கப்படுகிறது.


இந்த இரண்டு மாத காலம் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி  கிடையாது. ஏப்ரல் பாதியில் பார்க்கத் திறக்கப்படும் அப்பொழுது புதிய குட்டிகள் பார்க்கில் காணப்படும் செங்குத்தான மலையின் தாழ்ந்த பகுதியில் தான் வரையாடுகள் பிரசவிப்பது வேறு குட்டிகளிடமிருந்து தனது குட்டியை பாதுகாக்க தான் இது போன்ற இடத்தை தேர்வு செய்வது. கடந்த வருடம் 125 குட்டிகள் பிறந்துள்ளன தற்பொழுது இரவிகுளம் தேசிய பூங்காவில் 803 உரையாடுகள் உள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திக்காக,

-அஜித், மூணாறு.

Comments