காதலியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற காதலன் - தஞ்சாவூரில் பயங்கரம்!!
பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த பொன்னாங் கண்ணிக்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் தென்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 51). இவரது மனைவி தனலெட்சுமி என்கிற கோவிந்தம்மாள் (40), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அம்மு என்ற சிவஜோதி(19) என்ற மகளும் இருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(23). இவர் பேராவூரணியில் குடும்பத்துடன் தங்கி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராகவும், லாரி டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காளீஸ்வரனும், சிவஜோதியும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் காளீஸ்வரன் அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக சென்று வந்ததாக தெரிகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பேராவூரணியை விட்டு காளீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இதனால் காளீஸ்வரனும், சிவஜோதியும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது காதலனுக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்ததால் சிவஜோதி மிகுந்த வேதனை அடைந்தார். இது தொடர்பாக செல்போன் மூலம் அவர் காளீஸ்வரனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேராவூரணி வந்த காளீஸ்வரன், குடிபோதையில் சிவஜோதி வீட்டுக்கு சென்று சிவஜோதியுடன் தகராறு செய்து உள்ளார். தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அவர் சிவஜோதியை கட்டயப்படுத்தியுளார். மது போதையில் தகராறு செய்வதாக உடனடியாக பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் உடனடியாக வந்த காவல்துறையினர் அதிக போதையில் இருந்த காளீஸ்வரனை தகராறு செய்யக்கூடாது எனவும் அடுத்தமுறை புகார் வந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் போதை தெளிந்த ஆசாமி மீண்டும் தகராறில் ஈடுபட கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கதவின் அருகில் இருந்த ஆட்டங்கல்லை எடுத்து சிவாஜோதியை தாக்க சம்பவ இடத்திலேயே சிவாஜோதி உயிரிழந்தார். காளீஸ்வரன் தப்பி செல்ல உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு அந்த சரகம் காவல் நிலைய காவலர்கள் வந்து விசாரணை நடத்தினர். தப்பிச்சென்ற கொலையாளி காளீஸ்வரனை தேடி பிடிக்க சிறப்பு படை அமைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தஞ்சாவூர் பாலமுருகன்.
Comments