கோவில்பட்டியில் குறைவாக வாக்குப்பதிவான இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான இடங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த தேர்தலில் கோவில்பட்டி பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவான இடங்களான விநாயக நகர், இபிகாலனி சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் வட்டாட்சியர்கள் சரவணபெருமாள்,தங்கையா.ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி உட்பட கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.
Comments