பாராளுமன்ற தேர்தலுக்கானவேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று வேட்பு மனு தாக்கல் தூங்குகிறது. இன்று துவங்கும் வேட்பமான தாக்கல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30ம் தேதி வேட்பு மனு திரும்பப்பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதால் நேற்று வேட்பாளர்களுக்கான எல்லை கோடுகள் 100 மீட்டர் 200 மீட்டர்களில் போடப்பட்டன. மேலும் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் 360 டிகிரி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப் பட்டுள்ளது.
இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் பாதுகாப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலிலும் அலுவலகத்துக்கு உள்ளும் எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஈசா, சி.ராஜேந்திரன்.
Comments