ஓட்டப்பிடாரம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டுவரப்பட்ட ரூ.ஒரு லட்சம் பறிமுதல்.!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றார். தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை சுங்கச்சாவடியில்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் ஓட்டப்பிடாரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான சுகன்யா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி கணேசபுரம் தெருவை சேர்ந்த மணி மகன் செல்வகுமார்(24) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அவரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் வந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல்கொண்டு வரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இந்த பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் சுடலைமாடனிடம் ஒப்படைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர், -முனியசாமி.
Comments