தமுமுக சார்பாக நோன்பு திறப்பு நிகழ்ச்சி!! ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்டத்தின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி  குனியமுத்தூர் அருகே புட்டுவிக்கி சாலையில் அமைந்துஉள்ள NSK திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் சர்புதீன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் ஹாஜ்  கமிட்டி மாநில தலைவரும் ப.அப்துல் சமது  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்தியா கூட்டணி சார்பில் கோவையில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சியில் போட்டியிடும்  வேட்பாளர் ஈஸ்வர சாமி   இருவர்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் தமுமுக மாநில பொருளாளர் உமர் அவர்கள், மாநில பிரதிநிதி சுல்தான் அமீர் , அக்பர், சாதிக் அலி, கோவை சையது, தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப்பு ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம், தமுமுக மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக், திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேஷ், தமுமுக மாவட்டத் துணைத் தலைவர் நூர்தின், தமுமுக மமக மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆஷிக்  அகமது, பைசல் ரகுமான், சிக்கந்தர், அபு, அசாருதீன், மற்றும் ஷாஜகான், 

அப்பாஸ், மற்றும் திமுக கோட்டை அப்பாஸ், எஸ் ஏ காதர், சாலம் பாஷா, சமூக நீதி மாணவர் இயக்கம் மாநில செயலாளர் அம்ஜத் அலி கான், ருசி மைதீன், கேபிள் ரபீக், தொண்டரணி மாநில துணைச் செயலாளர் சகிர், தமுமுக முன்னாள் நிர்வாகிகள், மற்றும் இஸ்லாமிய இயக்கத்தின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் பல்வேறு முக்கியஸ்தர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் என 3000மூன்றாயத்திற்கு மேல் நபர்கள் கலந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

-சீனி, போத்தனூர்.

Comments